பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்தின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்துகுறித்து, JSMM தலைவர், பிரதமர் மோடிக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிந்து மாகாணத்தைச் சேர்ந்த JSMM தலைவர் ஷஃபி பர்ஃபத், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள், தற்போது ஜிஹாதிகளால் செல்வாக்கு பெற்ற ராணுவத் தளபதியால் கட்டுப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதக் குழுக்களின் கைகளுக்குச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும், இது உலகளாவிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், சிந்து மற்றும் பலுசிஸ்தானில் அணு ஆயுதங்கள் ரகசியமாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷஃபி பர்ஃபத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
















