ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் ரஷ்யா – உக்ரைன் போரால் கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் தான் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சமாதான பேச்சுவார்த்தையின்போது 20 அம்ச கோரிக்கைகளில் முக்கிய நில பிரச்னைகள் தீர்வின்றி இருப்பதாகக் கூறிய அதிபர் டிரம்ப், தனது அழுத்தம் உக்ரைனுக்கு பாதகமாக அமையும் என ஐரோப்பிய தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நிலைமை இப்படியே சென்றால் ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் என எச்சரித்த டிரம்ப், அந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
















