2027ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 11 ஆயிரத்து 718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2027ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 11 ஆயிரத்து 718 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி மாதமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
















