திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் தவறானது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு கொடுத்ததற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது அவதூறு பரப்பி உள்ளதாக தெரிவித்தார்.
தகுதி நீக்க நோட்டீஸில் உத்தவ் தாக்கரே கட்சியும் கையெழுத்து போட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேர்மையாக தீர்ப்பளித்தால் இந்த நிலையா என்ற பயத்தை திமுக ஏற்படுத்தியுள்ளது என்றும், வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை திமுக கேள்வி குறியாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
SIR-ல் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படவுள்ளதாகவும், 12.5 சதவீத வாக்காளர்கள் கூடுதல் வாக்காளர்கள் உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம் என்றும் கூறினார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானால் கவனமுடன் பார்க்க வேண்டும் என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் நியாமாக நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
வெளிப்படையான ஊழல் செய்கிறார்கள்; அதை யாரும் கேட்கக் கூடாது என நினைக்கிறார்கள் என்றும், மகளிர் உரிமைத் தொகைதான் முதலமைச்சரின் கடைசி அஸ்திரம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
















