ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகே, இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாகப் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாகக் கருதப்பட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஸ்ரீநகரில் சந்தேகத்திற்குரிய 200 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பயங்கரவாதிகளுக்குத் தங்குமிடம், நிதியுதவி, தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
















