தவெகவிற்கு போட்டி எனத் தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது என அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் தவெகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெகவில் விருப்பமனு வாங்குவது குறித்த தேதியை தலைவர் விஜய் அறிவிப்பர் என்றும், திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் தவெகவில் இணைவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என்று யாராலும் ஊகிக்க முடியாது எனவும் கூறினார். மேலும், தவெகவிற்கு மக்கள் சக்தி இருக்கிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
















