வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கடத்திச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.
அதில், மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில் சட்டவிரோதமாகக் கடத்தி விற்கப்படுவதாகவும், மாடுகளை பறிமுதல் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுனர்.
கருவுற்ற மாடுகளைச் சட்டத்திற்கு புறம்பாக வாகனத்தில் ஏற்றிக் காஞ்சிபுரம் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாடுகளை கடத்தி செல்லும் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
















