திரைப்படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் யோகி பாபு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்திருக்கும் ’மார்க்’ பட ப்ரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் யோகி பாபுவிடம் ப்ரொமோஷன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குக் காட்டமாக பதிலளித்த அவர், சில ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான காரணம் இதுதான் எனக் காட்டமாக விளக்கம் அளித்தார்.
குறிப்பிட்ட படத்தின் ப்ரொமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்கிறீர்களே, அந்த நிகழ்வு நடந்து 1 வாரம் ஆகிறது என்றும், அப்போது இந்தக் கேள்வியை கேட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அந்தப் படத்தில் 2 நாட்கள் தான் நடித்திருக்கிறேன் எனக் கூறிய அவர், இப்படியான கேள்வியை அந்தப் படத்தில் கேளுங்கள் என்றும், இந்தப் படத்திற்கான கேள்வியை மட்டும் தற்போது கேளுங்கள் எனவும் செய்தியாளர்களிடம் யோகி பாபு கடுப்பாகக் கூறினார்.
இதேபோல் யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் நடிகர்க் கிச்சா சுதீப்பும் அதிருப்தியாகப் பதிலளித்தார். நிகழ்ச்சியின்போது நடிகைகள் ஓரமாக அமர வைக்கப்பட்டிருப்பதாக யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கிச்சா சுதீப், இது எதார்த்தமான ஒன்று என விளக்கமளித்தார். பின்னர், நடிகைகள் இருவரையும் நடுவில் அமர வைத்துவிட்டு, அவர்களின் இருக்கையில் சுதீப் அமர்ந்து கொண்டார்.
















