கொல்கத்தாவில் கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 13-ம் தேதி உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனெல் மெஸ்ஸி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பங்கேற்ற அவரது சிலைத் திறப்பு மற்றும் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அதிகக் கட்டணம் செலுத்தியும் அவரைக் காண முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தைச் சூறையாடினர்.
விளையாட்டு அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மெஸ்ஸியைச் சுற்றி நின்றதால், மற்ற ரசிகர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி அசீம் குமார் ராய் தலைமையிலான குழு, இரண்டு நாடகளாக மைதானத்தை ஆய்வு செய்தது.
சரியான மேற்பார்வை இல்லாததே குழப்பத்திற்கு முக்கிய காரணம் என அந்தக் குழு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
















