புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயுடன், சாலையோர உணவகக் கடையை நடத்தி ஆக்ராவைச் சேர்ந்த சகோதரிகள் வறுமையை வென்றெடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி, நீலு சகோதரிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் சிகிச்சைக்காகச் சிஸ்டர்ஸ் மோமோஸ் என்ற சாலையோரத் தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் பல கேலி கிண்டல்களைச் சந்தித்த சகோதரிகள், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தங்களது தாயின் சிகிச்சைக்காகப் பணம் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிஸ்டர் மோமோஸ் உணவகம் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தாய்க்குச் சிகிச்சையும் அளித்தனர்.
தற்போது அவர்களது தாய் பூரண நலமடைந்துள்ள நிலையில், அஞ்சலி மற்றும் நீலு சகோதரிகள் தொடர்ந்து சிஸ்டர் மோமோஸ் உணவகத்தை நடத்தி வருகின்றனர். அத்துடன், அதே பகுதியில் மேலும் ஒரு உணவகத்தையும் அவர்கள் தற்போது தொடங்கியுள்ளனர்.
அஞ்சலி மற்றும் நீலுவின் இந்தப் பயணம், தடைகளைத் தகர்க்க நினைக்கும், அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம்.
















