மதுரைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறைச்சிக்காகக் கறவை மாடுகளை திருடி விற்பனைச் செய்த கும்பலை, மாட்டு உரிமையாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்டியூர், கோமதிபுரம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் தொடர்ந்து திருடுபோவதாகப் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் மாடு வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்கத்தினரும் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்தநிலையில் மாடுகளைத் திருடிய 17வயது சிறுவன் உட்பட 5 பேரைப் பிடித்த, மாட்டின் உரிமையாளர்கள் அவர்களை, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருடிய மாடுகளை இறைச்சிக்காக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைச் செய்ததாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். முக்கிய குற்றவாளியான பொதிகை ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
















