EPF பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ சேவைகள் மூலம் எடுக்கும் வசதியைத் தொழிலாளர் அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது.
EPF-இல் இருக்கும் பணம் சந்தாதாரருக்கே சொந்தமானது. ஆனால் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக விண்ணப்பித்துப் பணத்திற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில், ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலமாகவே பணம் பெற்றுக்கொள்ளும் புரட்சிகரமான வசதி அறிமுகமாக உள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய நடைமுறை அடுத்தாண்டு மார்ச் அல்லது அதற்கு முன்பாகவே செயல்படுத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















