செவிலியர்கள் போராட்டம் : திமுக அரசை கண்டித்த அண்ணாமலை!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவிலியர்கள் போராட்டம் : திமுக அரசை கண்டித்த அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய சுமார் 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைக் குறித்துக் கூடக் கவலைப்படாமல், பொதுமக்கள் நலனுக்காக முன்னின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய, அவர்கள் கோரிக்கை வைக்காத இடமே இல்லை. ஆனால், திமுக அரசு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான். அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட, சுகாதாரத்துறை அமைச்சர் கொடுக்க மறுக்கிறார் என்பது, பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம்.

ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Nurses' protest: Annamalai condemns DMK governmentnewsDMKMK StalinNurses strikeNurses protest
ShareTweetSendShare
Previous Post

பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்…!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies