ரோடு ஷோ தொடர்பாக வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடத் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதையடுத்து, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்த கட்சிகள் சார்பில் ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.
இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுஎனத் தமிழகழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதுசம்பந்தமாக வழக்கு தொடரால் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
















