பாஜக, அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
திமுக ஆட்சியில் மக்களின் குரல்வளை நெறிக்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியவர் பூர்ண சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்பட்டு வருவதற்கான பதில் தேர்தலில் நிச்சயம் கிடைக்கும் என்றும் திருப்பரங்குன்றம் விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈகோ பிரச்னை உள்ளது என்று கூறிய தமிழிசை பாஜக-அதிமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
















