மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வொர்லி கடற்கரையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை வொர்லி கடற்கரை அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கடற்கரையாகும். இது அழகான கடற்கரையைக் கொண்டுள்ளதால், மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
இதனால் அங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இப்படி சிறப்பு வாய்ந்த இந்தக் கடற்கரையில் அவ்வபோது டால்பின்கள் தென்படுவதும் வழக்கம். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் டால்பின்கள் தென்பட்டதால் அதனைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வொர்லி கடற்கரையில் டால்பின்கள் வலம் வந்தன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்கரையில் டால்பின்கள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















