தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், மயிலாடுதுறை பொறையார் பகுதியில் மணிமண்டபம் கட்டுவதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அடிக்கல் நாட்டும் விழாவானது இன்று நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரங்கம்பாடி மீனவ கிராம மக்கள் மேற்பட்டோர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடியில் மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
















