உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது என அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோரிஜ்ஜியா ஆகிய நான்கு உக்ரைன் மாகாணங்களைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்க இருப்பதாகப் பரவிய தகவலுக்கு அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது என்பது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்துள்ளார்.
















