டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு நடந்த போராட்டம்குறித்து, அந்நாட்டு ஊடகங்கள் திரித்துச் செய்தி வெளியிடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த வன்முறையில் இந்து இளைஞரான திபு சந்திர தாஸ் என்பவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.
இதனைக் கண்டித்து டெல்லியில் வங்கதேச தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது வங்கதேச தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனைத் திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, செய்திகள் திரிக்கப்படுவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இந்தியாவின் கூற்றை நிராகரித்துள்ள வங்கதேச அரசு, போராட்டக்காரர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வர எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
















