மாற்றுத்திறனாளி மாணவன் மீது மிளகாய் பொடி தூவி கொடூர தாக்குதல் நடத்திய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள நவகர் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகச் செயல்பட்டு வரும் ஒரு சிறப்புப் பள்ளியில் 16 வயது சிறுவன் ஒருவன் பயின்று வருகிறான்.
அங்குப் பணிபுரியும் ஒரு ஆசிரியர், அந்தச் சிறுவனை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர், சிறுவனின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவி, கண்ணில் நீர் வடிய வடிய, அவன் வலியால் துடித்ததைப் பொருட்படுத்தாமல் பெல்ட் மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி சிறுவனைக் கொடுமைப்படுத்திய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
















