இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் புதிய உயரங்களை எட்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 9 மாத காலத்திற்குள் இறுதி செய்யப்பட்டது. பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் பேசினார்.
இதையடுத்து, இருநாடுகள் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டதாக இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒப்பந்தம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் புதிய உயரங்களை எட்டும் என்று கூறியுள்ளார்.
பல்வேறு துறைகளில் 20 பில்லியன் டாலர் முதலீட்டை நியூசிலாந்து அறிவிப்பது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
















