அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ஐந்து கண்கள் கூட்டமைப்பில் உள்ள ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுடன் தற்போது தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்ததாகக் கனடாவுடன் விரைவில் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவே சா்வதேச புவி அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதற்கான உதாரணம் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
















