வேலூர் மாவட்டம் காட்பாடியில் பட்டியலின ஆட்டோ ஓட்டுநர்களைத் தாக்கியதாக தி.மு.க. கவுன்சிலர் உட்பட 3 பேர் மீது SC/ST பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் செயல்படும் ஆட்டோ ஸ்டேண்டில், தி.மு.க. மற்றும் வி.சி.க. ஆட்டோ சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
கடந்த 18ஆம் தேதி இரவு, 33ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முகம், சுந்தர் விஜி மற்றும் ஜெயா ஆகிய தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேர், அங்கு ஆவின் பங்க்கை இறக்கியதால் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேர், சாதியின் பெயரை குறிப்பிட்டு தாக்கியதாகக்கூறி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில், வி.சி.க. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் புகாரளித்தனர்.
அதனடிப்படையில் 33ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட 3 பேர் மீதும் SC/ST உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும், ஆட்டோ ஓட்டுநர்களை மிரட்டிச் செல்போனை பறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
















