தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டன பள்ளி கிராமத்தில் பாஜக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துக் கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.
பின்னர், கூட்டத்தில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
அனைத்து மாவட்டங்களிலும் நாவோதயா, கேந்திர வித்யாலயா பள்ளிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருந்தாலும், மாநில அரசு அனுமதி மறுக்கிறது என கூறினார்.
ஒரே குடும்பத்தினர் அனைத்து அதிகாரங்களை பயன்படுத்தி வருவதற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், பொங்கலுக்கு பிறகு பாஜக-அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் இணையவுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















