திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காகச் சாலைகளைச் சேதப்படுத்தி கட்சி கொடி வைக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூரில் 29ம் தேதி நடைபெறும் திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரை வரவேற்கும் விதமாகத் திமுகவினர், கோவை நீலாம்பூர் சாலையை சேதப்படுத்தி கட்சிக் கொடிகளை அமைத்து வருகின்றனர்.
கோவையில் பல சாலைகள் ஏற்கனவே குண்டும், குழியுமாகக் காணப்படும் நிலையில், அதனை சீரமைப்பதை விட்டுவிட்டு, வரவேற்பு என்ற பெயரில் சாலைகளை சேதப்படுத்துவது பொதுமக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி முடிந்த பின்னரும், சாலைகள் சீரமைக்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















