இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2025ஆம் ஆண்டு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் பல தருணங்களை தந்தது எனத் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு முதல் விளையாட்டு வரை மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் முதல் உலகின் மிகப்பெரிய மேடைகள் வரை இந்தியா தனது முத்திரையைப் பதித்துள்ளது எனக் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்துார் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையின் சின்னமாக மாறியது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டது எனத் தெரிவித்தார்.
மேலும், ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, பாரத அன்னை மீதான அன்பு மற்றும் பக்தி நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிப்பட்டது என்றும், மக்கள் தங்கள் உணர்வுகளை தங்களுக்குரிய வழிகளில் வெளிப்படுத்தினர் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
















