அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கத்தினால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்களில் டெவின் என்ற பனிப்புயல் தாக்கத்தினால், கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. சாலைகள் எங்கும் பனி படர்ந்து காணப்படுவதாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 7000 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
பனிப்புயலை எதிர்கொண்டு வரும் மாகாணங்கள் மீட்பு பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளன.
















