கமிஷன் அரசியலை மறைக்கத் திருப்பூரையே குப்பை நகரமாகத் திமுக மாற்றியுள்ளது எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குப்பைக்கிடங்கு அமைப்பதை கண்டித்து முதலமைச்சருக்கு எதிராக இடுவாய் கிராம மக்கள் கருப்பு தினம் அறிவித்திருப்பது திமுக அரசுக்கான வலுவான எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
10 லட்சத்திற்கும்மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை பட்டியலில், சென்னை 38ஆவது இடத்திலும், கோவை 28ஆவது இடத்தில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மதுரை மிகவும் அசுத்தமான நகரமாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாக சாடியுள்ளார்.
இந்த அவல நிலைக்குக் காரணமான கமிஷன் அரசியலை மறைக்க திருப்பூரையே குப்பை நகரமாக திமுக அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது எனவும் இடுவாய் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு பாஜக துணை நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















