ஆங்கில புத்தாண்டு பாரத மக்கள் அனைவருக்கும் இனியதாக அமையட்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பழையதை பின்னால் விட்டுவிட்டு, புதிய நம்பிக்கையுடன் முன்னே செல்லும் நாள் இன்று. புதிய கனவுகள், புதிய இலக்குகள், புதிய முயற்சிகளுடன் வாழ்க்கைக்கு ஒரு புத்தம் புதிய தொடக்கம் தரும் ஆங்கில புத்தாண்டு பாரத மக்கள் அனைவருக்கும் இனியதாக அமையட்டும் என தெரிவித்துள்ளர்.
அமைதி, ஆரோக்கியம், வெற்றி, மகிழ்ச்சி என அனைத்தும் உங்கள் இல்லத்தையும் வாழ்க்கையையும் அலங்கரிக்கட்டும். 2026 ஆம் ஆண்டு உங்கள் உழைப்புக்கு பலன் தரும், நம்பிக்கைக்கு வழி காட்டும் சிறந்த ஆண்டாக மலரட்டும். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், புதிய ஆண்டு, தமிழக மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும், மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்லும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையவும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
















