திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும், 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசம் குறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், திருவண்ணாமலையில் ஒரே வாரத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
2026 ஏப்ரலில் தேர்தல் வரும்போது, தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
















