மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சமத்துவ நடைபயணத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நடைபயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பயணம் வரும் 12ம் தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது.
இந்த பயணத்தின் தொடக்க விழாவில் மதிமுக நிர்வாகிகள் அழைப்பை ஏற்று விசிக, மநீம உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், நடைபயண துவக்க விழா அழைப்பிதழின் முன் அட்டையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்ததால், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
















