தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய எல்.முருகன், சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத்தலைவராக அமர்த்தி பிரதமர் மோடி அழகு சேர்த்துள்ளாளர் என தெரிவித்துள்ளார்.
சிபிஆர் இன்னும் பெரிய பதவிகளை அடைய வேண்டும் என முருகப்பெருமானை வேண்டிக் கொள்வதாகவும் கூறினார்.
















