விவேகானந்தர் போல தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், எந்த நிலைக்கு உயர்ந்தாலும் தம்முடன் இருந்தவர்களை நினைத்துப் பார்க்க கூடியவர் என குறிப்பிட்டார், உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த பிரதமர் மோடிக்கு நன்றி எனவும் நயினார் கூறினார்.
















