AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, வானகரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இந்நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அனைத்து மாணவர்களும் விஞ்ஞான அறிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பிரதமர் மோடி 2047-ஐ இலக்காக வைத்துள்ள நிலையில், இந்த மாணவர்களால் அதற்கு முன்னரே இந்தியா வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
















