அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். மிகவும் பிரபலமான இந்த போட்டியை கிராம கமிட்டி குழுவினர் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் என இருதரப்பினர் நடத்தி வந்தனர்.
இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக யார் போட்டியை நடத்துவது என்ற மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த 30ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது திடீரென மோதல் ஏற்பட்டது,
இதற்கிடையே மாநகர காவல் ஆணையரிடம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்த கிராம கமிட்டி குழுவினர், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
















