அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏமாற்று வேலை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்..
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசின் ஆயுட்காலம் முடிவடைய கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது ? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா ? என்றும் அவர் வினவினார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர் ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறினார்.
















