ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் 7 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் போபாலில் இருந்து ரயில் மார்க்கமாக மதுரா வந்தடைந்தார்.
ரயில் நிலையத்தில் இருந்து மோகன் பகவத்தை பலத்த பாதுகாப்புடன் பிருந்தாவனத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
















