தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத்தைத்தான் அறிவித்துள்ளது என்றும், முழுமையான ஓய்வூதியத்தை அல்ல எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் அவர், திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்காத ஒன்று என தெரிவித்தார்.
மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும், தேர்தல் நடந்தால் திமுக வீட்டிற்கு செல்வது உறுதி என்றும் அவர் கூறினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கைக் குழு பொய்யை பரப்பதற்காகவே மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்றும், பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தமிழக மக்களின் மேம்பாடு சார்ந்ததாக இருக்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.
















