தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், IPDS என்ற நிறுவனம் வெளியிட்ட தேர்தல் கருத்து கணிப்பு விவரம் ஒன்றை தமது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதில் தமிழகத்தில் கூட்டணியே அரசியல் உண்மை என்றும் ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது எனவும் கூறியுள்ளார்.
கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது எனவும் அதே நேரம் அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
















