அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம கமிட்டி நடத்த அனுமதிக்கக் கோரி அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக் கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம கமிட்டி நடத்த அனுமதிக்க வேண்டுமென அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிராம மக்கள், அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
















