27 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் சோழர்கால பாசிஅம்மன் சிலைகள்: பாசிப்பட்டினம் கிராம மக்கள் நெகிழ்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மர்ம நபர்களால் திருடப்பட்ட சோழர்கால சிலைகள் நீதிமன்ற உத்தரவின் படி சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட உள்ளதால் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள பாசிஅம்மன் கோயிலில் பழங்கால சுவாமி சிலைகள் 27 ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்களால் திருடப்பட்டன. இதனை மீட்ட அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலக கருவூலத்தில் பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் சிலைகளை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வரும் 7ம் தேதி கோயிலுக்கு சிலைகள் எடுத்துவரப்படுகின்றன. இதனை முன்னிட்டு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்தனர்.
















