திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி திமுக நிர்வாகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.
மதுரை தனக்கன்குளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். 40 வருடமாக திமுக தொண்டராக இருந்த வந்த இவர், பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். திமுக மீது அவர் கொண்ட தீவிர பற்றின் காரணமாக அவரது இடது கையில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தை பச்சையாக குத்தி உள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை எனக்கூறி அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
















