தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு மாநாட்டில் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர், பிரதமர் மோடியின் திட்டங்கள் இந்தியாவை வலிமைப்படுத்துகின்றன என தெரிவித்தார். சிறு விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்துவதில்தான் பிரதமரின் சிந்தனை உள்ளது என்றும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல பிரதமர் மோடி தயாராக உள்ளதாகவும் கூறினார்.
விவசாயிகளின் பிரச்னையை ஸ்டாலின் அரசு கண்டுகொள்ளவதில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை என விமர்சித்தார்.
















