மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பின்னர் பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசினார். அப்போது, திமுக மீது தமிழக மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தொண்டர்களின் விருப்பப்படி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றும் அன்புமணி தெரிவித்தார்.
















