அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழினிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இபிஸ், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி இந்த கூட்டணி அமைந்துள்ளதாகவும், அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இபிஎஸ் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்றும் தெரிவித்தார். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
















