இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கப்பட்ட 55 இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன
மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ், ஒடியா, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய செம்மொழிகளில் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ளன.
இதன் மிக முக்கிய அம்சமாக, திருக்குறள் சைகை மொழியில் காணொளி மற்றும் புத்தகத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் திருக்குறளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் ஒரு முன்னோடித் திட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த இலக்கியப் படைப்புகளை டெல்லியில் வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய மொழிகளில் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
















