கோவை அருகே உள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய விநாயகர் மற்றும் தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக கோயிலை இடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அரசு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து கோயில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
கோயில் நிர்வாகிகளிடம் மனுவை பெற்று கொண்ட எல்.முருகன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
















