சேலம் கோட்டை மைதானத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற கோரி சேலம் மாநகர் பகுதியில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, 2வது நாளாக கோட்டை மைதானத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபடுவார்கள் என்பதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
















