திமுக அரசு, தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்..
இது குறித்து திருப்பூரில் அவர் அளித்த பேட்டியில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கப் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் மாநில தலைவரைச் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுகையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களுக்குக் காவல் துறையினரின் அராஜகப் போக்கால் நெஞ்சு மற்றும் கை, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது,
தற்போது திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,
அதே போன்று இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்,
தமிழகத்தில் சர்வாதிகார பாசிச ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இந்துக்களுக்கு விரோதியான ஆட்சியாகவும் உள்ளது என்றும், ஈட்டி வீரம் பாளையம் பகுதியில் நூறாண்டு காலமாக வழிபட்டு வந்த முருகன் கோவிலில் சிலர் நயவஞ்சகத்தின் மூலமாக அப்பகுதியில் உள்ள கிராம மக்களை ஏமாற்றி பட்டா வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்று ஏமாற்றி உள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்குப் பின்னால் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் நீதிமன்றத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி இதற்குச் சமூக தீர்வு எட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது,
ஆனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் கோவிலை இடித்துள்ளதாகவும், அதிகாரிகள் எந்த ஒரு உத்தரவையும் காண்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் திமுக அரசு வந்ததிலிருந்து தற்போது வரை 167 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்துக்களின் மனது புண்படும் வகையில் அங்குள்ள சிலைகளைச் சேதப்படுத்தியுள்ளனர்,
இதை அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அங்குச் சென்றபோது அங்குள்ள மக்கள் குறைகளைக் கூறுவதை கூடக் காவல்துறையினர் தடுத்துள்ளதாகவும், இது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்?
வயதை கூடக் கருத்துக் கொள்ளாமல் இந்து முன்னணி மாநில தலைவர் நெஞ்சில் அடித்தும் மற்றும் கைக்கால்களில் காயங்கள் ஏற்படுத்தியது காவல்துறையினரால் என்றும், திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழாவிற்கு 50 50 நபர்களாக அனுப்பும் காவல்துறையினர் தீபம் ஏற்ற 10 நபர்களைக் கூட அனுமதிக்கவில்லை என்றும்,
இதற்கு நீதிமன்றத்தை நாடி நிச்சயம் கோவிலைத் திரும்பக் கட்டுவோம் என்றும், மேலும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும் பேட்டி அளித்தார்.
















