திருப்பூர் அருகே கோவில் இடிப்பு -- நீதிமன்றம் மூலம் நியாயம் பெறுவோம் என இந்து முன்னணி உறுதி!
Sep 12, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு — நீதிமன்றம் மூலம் நியாயம் பெறுவோம் என இந்து முன்னணி உறுதி!

Manikandan by Manikandan
Jan 7, 2026, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசு, தொடர்ந்து பக்தர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்..

இது குறித்து திருப்பூரில் அவர் அளித்த பேட்டியில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கப் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் மாநில தலைவரைச் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுகையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களுக்குக் காவல் துறையினரின் அராஜகப் போக்கால் நெஞ்சு மற்றும் கை, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது,

தற்போது திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,

அதே போன்று இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

தமிழகத்தில் சர்வாதிகார பாசிச ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இந்துக்களுக்கு விரோதியான ஆட்சியாகவும் உள்ளது என்றும், ஈட்டி வீரம் பாளையம் பகுதியில் நூறாண்டு காலமாக வழிபட்டு வந்த முருகன் கோவிலில் சிலர் நயவஞ்சகத்தின் மூலமாக அப்பகுதியில் உள்ள கிராம மக்களை ஏமாற்றி பட்டா வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்று ஏமாற்றி உள்ளதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்குப் பின்னால் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் நீதிமன்றத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி இதற்குச் சமூக தீர்வு எட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது,

ஆனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் கோவிலை இடித்துள்ளதாகவும், அதிகாரிகள் எந்த ஒரு உத்தரவையும் காண்பிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் திமுக அரசு வந்ததிலிருந்து தற்போது வரை 167 கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்துக்களின் மனது புண்படும் வகையில் அங்குள்ள சிலைகளைச் சேதப்படுத்தியுள்ளனர்,

இதை அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அங்குச் சென்றபோது அங்குள்ள மக்கள் குறைகளைக் கூறுவதை கூடக் காவல்துறையினர் தடுத்துள்ளதாகவும், இது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்?

வயதை கூடக் கருத்துக் கொள்ளாமல் இந்து முன்னணி மாநில தலைவர் நெஞ்சில் அடித்தும் மற்றும் கைக்கால்களில் காயங்கள் ஏற்படுத்தியது காவல்துறையினரால் என்றும், திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழாவிற்கு 50 50 நபர்களாக அனுப்பும் காவல்துறையினர் தீபம் ஏற்ற 10 நபர்களைக் கூட அனுமதிக்கவில்லை என்றும்,

இதற்கு நீதிமன்றத்தை நாடி நிச்சயம் கோவிலைத் திரும்பக் கட்டுவோம் என்றும், மேலும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகவும் பேட்டி அளித்தார்.

 

Tags: tnbjpbjphindu munnaniMurugan TempleTirupurKadeswara C Subramaniam
Share
Tweet
SendShare
Previous Post

ஜல்லிக்கட்டு – மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கான ஆன்- லைன் முன்பதிவு தொடங்கியது!

Next Post

தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்எஸ்எஸ் மனு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies